அறத்துப்பால் · இல்லறவியல்
13. அடக்கம் உடைமை
குறள் 121–130
- குறள் 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.
- குறள் 122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
- குறள் 123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்.
- குறள் 124நிலையிற் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.
- குறள் 125எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.
- குறள் 126ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து.
- குறள் 127யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
- குறள் 128ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்.
- குறள் 129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.
- குறள் 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.