அறத்துப்பால் · இல்லறவியல்
12. நடுவு நிலைமை
குறள் 111–120
- குறள் 111தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்.
- குறள் 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து.
- குறள் 113நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.
- குறள் 114தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்.
- குறள் 115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.
- குறள் 116கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
- குறள் 117கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
- குறள் 118சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணி.
- குறள் 119சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.
- குறள் 120வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.