அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமை

குறள் 118நடுவு நிலைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 24 · ஸ்கேன் 57 · மூலமும் சான்றும்