குறள் 111 — நடுவு நிலைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருக்கவே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 23 · ஸ்கேன் 56 · மூலமும் சான்றும்