அறத்துப்பால் · இல்லறவியல்

11. செய்ந்நன்றியறிதல்

குறள் 101110
  1. குறள் 101
    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.
  2. குறள் 102
    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.
  3. குறள் 103
    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.
  4. குறள் 104
    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
  5. குறள் 105
    உதவி வரைத்தன் றுதவி உதவிசெய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
  6. குறள் 106
    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
  7. குறள் 107
    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.
  8. குறள் 108
    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.
  9. குறள் 109
    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்.
  10. குறள் 110
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.