குறள் 107 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 22 · ஸ்கேன் 55 · மூலமும் சான்றும்