அறத்துப்பால் · இல்லறவியல் · செய்ந்நன்றியறிதல்

குறள் 108செய்ந்நன்றியறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவர் தமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

மூலம் · அச்சுப் பக்கம் 22 · ஸ்கேன் 55 · மூலமும் சான்றும்