அறத்துப்பால் · இல்லறவியல் · செய்ந்நன்றியறிதல்

குறள் 109செய்ந்நன்றியறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமை கூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்று விடவேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

மூலம் · அச்சுப் பக்கம் 22 · ஸ்கேன் 55 · மூலமும் சான்றும்