அறத்துப்பால் · இல்லறவியல்

10. இனியவை கூறல்

குறள் 91100
  1. குறள் 91
    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
  2. குறள் 92
    அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.
  3. குறள் 93
    முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
  4. குறள் 94
    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
  5. குறள் 95
    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.
  6. குறள் 96
    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.
  7. குறள் 97
    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.
  8. குறள் 98
    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
  9. குறள் 99
    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.
  10. குறள் 100
    இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.