அறத்துப்பால் · இல்லறவியல் · இனியவை கூறல்

குறள் 100இனியவை கூறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 20 · ஸ்கேன் 53 · மூலமும் சான்றும்