குறள் 101 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“வாராது வந்த மாமணி” என்பது போல், “செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
மூலம் · அச்சுப் பக்கம் 21 · ஸ்கேன் 54 · மூலமும் சான்றும்