அறத்துப்பால் · இல்லறவியல் · இனியவை கூறல்

குறள் 93இனியவை கூறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 19 · ஸ்கேன் 52 · மூலமும் சான்றும்