குறள் 125 — அடக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கெனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 25 · ஸ்கேன் 58 · மூலமும் சான்றும்