குறள் 127 — அடக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 26 · ஸ்கேன் 59 · மூலமும் சான்றும்