குறள் 144 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 29 · ஸ்கேன் 62 · மூலமும் சான்றும்