குறள் 145 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 29 · ஸ்கேன் 62 · மூலமும் சான்றும்