குறள் 141 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 29 · ஸ்கேன் 62 · மூலமும் சான்றும்