குறள் 171 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும்பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 35 · ஸ்கேன் 68 · மூலமும் சான்றும்