அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமை

குறள் 172வெஃகாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.

மூலம் · அச்சுப் பக்கம் 35 · ஸ்கேன் 68 · மூலமும் சான்றும்