அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமை

குறள் 188புறங்கூறாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

மூலம் · அச்சுப் பக்கம் 38 · ஸ்கேன் 71 · மூலமும் சான்றும்