குறள் 184 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
மூலம் · அச்சுப் பக்கம் 37 · ஸ்கேன் 70 · மூலமும் சான்றும்