அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்

குறள் 219ஒப்புரவறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்செய்யா தமைகலா வாறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

மூலம் · அச்சுப் பக்கம் 44 · ஸ்கேன் 77 · மூலமும் சான்றும்