அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமை

குறள் 241அருளுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முள.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.

மூலம் · அச்சுப் பக்கம் 49 · ஸ்கேன் 82 · மூலமும் சான்றும்