குறள் 266 — தவம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 54 · ஸ்கேன் 87 · மூலமும் சான்றும்