அறத்துப்பால் · துறவறவியல் · தவம்

குறள் 262தவம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 53 · ஸ்கேன் 86 · மூலமும் சான்றும்