குறள் 275 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டுவிட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோருக்கு வந்து சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 55 · ஸ்கேன் 88 · மூலமும் சான்றும்