குறள் 271 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.
மூலம் · அச்சுப் பக்கம் 55 · ஸ்கேன் 88 · மூலமும் சான்றும்