குறள் 278 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.
மூலம் · அச்சுப் பக்கம் 56 · ஸ்கேன் 89 · மூலமும் சான்றும்