அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 284கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 57 · ஸ்கேன் 90 · மூலமும் சான்றும்