குறள் 299 — வாய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 60 · ஸ்கேன் 93 · மூலமும் சான்றும்