குறள் 294 — வாய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 59 · ஸ்கேன் 92 · மூலமும் சான்றும்