அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமை

குறள் 315இன்னா செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 63 · ஸ்கேன் 96 · மூலமும் சான்றும்