குறள் 316 — இன்னா செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கட் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 64 · ஸ்கேன் 97 · மூலமும் சான்றும்