அறத்துப்பால் · துறவறவியல் · நிலையாமை

குறள் 337நிலையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பல.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 68 · ஸ்கேன் 101 · மூலமும் சான்றும்