அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்

குறள் 356மெய்யுணர்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

துறவற வாழ்க்கைக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்பமாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 72 · ஸ்கேன் 105 · மூலமும் சான்றும்