அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்

குறள் 354மெய்யுணர்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும்கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 71 · ஸ்கேன் 104 · மூலமும் சான்றும்