அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்

குறள் 353மெய்யுணர்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 71 · ஸ்கேன் 104 · மூலமும் சான்றும்