குறள் 368 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம்: துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 74 · ஸ்கேன் 107 · மூலமும் சான்றும்