குறள் 363 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 73 · ஸ்கேன் 106 · மூலமும் சான்றும்