குறள் 371 — ஊழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலைகாட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.
மூலம் · அச்சுப் பக்கம் 75 · ஸ்கேன் 108 · மூலமும் சான்றும்