பொருட்பால் · அரசியல் · கல்லாமை

குறள் 410கல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்கற்றாரோ டேனை யவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்