குறள் 407 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நுண்மாண் நுழைபுல மில்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண்பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்