குறள் 403 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 83 · ஸ்கேன் 116 · மூலமும் சான்றும்