பொருட்பால் · அரசியல் · அறிவுடைமை

குறள் 428அறிவுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 88 · ஸ்கேன் 121 · மூலமும் சான்றும்