பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகை

குறள் 464தெரிந்து செயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 95 · ஸ்கேன் 128 · மூலமும் சான்றும்