குறள் 463 — தெரிந்து செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கைமுதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 95 · ஸ்கேன் 128 · மூலமும் சான்றும்