குறள் 466 — தெரிந்து செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 96 · ஸ்கேன் 129 · மூலமும் சான்றும்