பொருட்பால் · அரசியல் · வலியறிதல்

குறள் 471வலியறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவனின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 97 · ஸ்கேன் 130 · மூலமும் சான்றும்