பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்

குறள் 508தெரிந்து தெளிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

மூலம் · அச்சுப் பக்கம் 104 · ஸ்கேன் 137 · மூலமும் சான்றும்