பொருட்பால் · அரசியல் · தெரிந்து வினையாடல்

குறள் 519தெரிந்து வினையாடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்குந் திரு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 106 · ஸ்கேன் 139 · மூலமும் சான்றும்